வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தள்ளுமுள்ளு, அடிதடி !! பரபரப்பு வீடியோ!!

 
vaarisu

தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக  வலம் வரும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று டிசம்பர் 24ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. . இயக்குநர் வம்சி இயக்கத்தில் ராஜு தயாரிப்பில்  இப்படம் எமோஷனல் குடும்பப் படமாக உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த படத்தில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்  எனவும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா என நட்சத்திரப் பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் என்கின்றனர் இவரது ரசிகர்கள். 

வாரிசு

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படம்  பொங்கலுக்கு  ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவரை வாரிசு படத்தின் முதல் 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த  பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் தற்போதெல்லாம் ஒரு குட்டிக் கதை சொல்வார். அந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இன்று நடக்கும் நிகழ்ச்சியில், நடிகர் விஜயை நேரில் சந்திக்க அவரின் ரசிகர்கள் பலர் ஆர்வமாக உள்ளனர். அதனால், நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் வாசலில் பெரும் கூட்டம் காணப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறுவதால் விஜய் ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில்  கூடினார்கள். எனவே, கூட்டத்தை கட்டுப்படுத்த பவுன்சர்களும், காவல்துறையினரும் அந்த இடத்தில குவிக்கப்பட்டிருந்தனர். இவர்களையெல்லாம் மீறி விஜய் ரசிகர்கள் பலரும் வேகமாக உள்ளே சென்றதால் அவர்களை தடுக்க  போலீசார் தடுக்க முயன்றனர். போலீசாருக்கு காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரசிகர்களுக்கிடேய தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web