RBI அதிரடி!! வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!!

 
லாக்கர்

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளில் முக்கிய செயல்பாடுகள், விடுமுறை தினங்கள் குறித்த அனைத்தும் ரிசர்வ் வங்கி தான் நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வங்கிகளில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அதன்படி ஜனவரி 1ம் தேதிக்குள் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.

லாக்கர்

தற்போது இதற்கான கால அவகாசம் நீட்டிப்பது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தற்போது வங்கி லாக்கர்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு  தங்களது ஒப்பந்தத்தை டிசம்பர் 31, 2023 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தற்போது லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஒப்பந்தம் குறித்து தெளிவாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும், இது குறித்த மேலான தகவல்களை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை என்பதால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது .

லாக்கர்

இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகள் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்தம் குறித்து ஏப்ரல் 30க்குள் அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில்  ஜூன் 30ம் தேதிக்குள் 50% வாடிக்கையாளர்கள் கையெழுத்திட வேண்டும் எனவும் , 75% வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாடிக்கையளர்களுக்கு ஸ்டாம்ப் பேப்பர் வழங்குதல், மின்னணு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் ஒப்பந்தங்களின் நகல்களை வழங்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web