ராஜீவ்காந்தி கொலை வழக்கு.. அனுசுயாவுக்கு கொலை மிரட்டல்! வைரலாகும் ஆடியோ!

 
அனுசுயா

ராஜீவ் காந்தி படுகொலையின் போது ஸ்ரீபெரும்புதூரில், சம்பவ இடத்தில் இருந்து, படுகாயமடைந்து உயிர் பிழைத்தவர் முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயா. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலராக உள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டிருந்த  7 பேர் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயாவுக்கு வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


அனுசுயாவுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரன் குறித்து பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அனுசுயாவிடம் குறிப்பாக மிரட்டுவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், அனுசுயாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். 

அனுசுயா

செல்போனில் கொலை மிரட்டல்கள் வருவது குறித்து அனுசுயாவிடம் கேட்டபோது, ‘‘அனாமதேய எண்ணில் இருந்து கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறது. அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் பேசுகின்றனர். பாதுகாப்பு கேட்டு காவல் துறையில் புகார் அளிக்க இருக்கிறேன்’’ என்று கூறினார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!