இன்று ரேஷன்கார்டு குறை தீர்ப்பு முகாம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
ரேஷன்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் சிறப்பு தொகுப்பில் இலவச வேஷ்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. இத்தனை நாள் ரேஷன்கடைக்கு எட்டிப்பார்க்காதவர்கள் கூட சிறப்பு தொகுப்பை வாங்க முண்டியடித்தனர்.  தமிழகம் முழுவதும் மானிய விலையில் உணவுப் பொருட்கள் மத்திய, மாநில அரசுகள் சார்பில்  ரேஷன் கார்டு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் விரல் பதிவு கைரேகை

ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம்  குறித்த  குறைதீர்க்கும் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மாதாந்திர பொது விநியோகத் திட்டத்துக்கான மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று ஜனவரி 21 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

ரேஷன்
இந்த குறைதீர்க்கும் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்யலாம். அத்துடன் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நேரில் வரமுடியாத மாற்றுத்திறனாளிகள்,  மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படுகிறது.  மூத்த குடிமக்களின் இயலாமை, வயது, மாற்றுத்திறனாளிகளின் சிரமம் குறைத்தலுக்காக இந்த அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web