ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சி!! இனி கண்கருவிழி மூலம் உணவு பொருட்கள்!!

 
கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள்

இந்தியா முழுவதும் ஒரே இந்தியா ஒரே ரேஷன்  திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் மானிய விலையில் ரேஷன் பொருட்களை பெற முடியும். இதன்படி மத்திய அரசின் அன்னயோஜனா திட்டப்படி 15 கிலோ இலவச அரிசியும், மாநில அரசு சார்பில் 5 கிலோ அரிசியும் இலவசமாக விநியோகப்பட்டு வருகிறது. 

ரேஷன்

ரேஷன் கடைகளில் அரிசி, துவரம்பருப்பு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய்.சர்க்கரை என பல பொருட்கள் மானிய விலையிலும் விநியோகம் செய்யப்படுகின்றன. இதில் மத்திய மாநில அரசுகளில் பங்களிப்புக்கள் கலந்தே உள்ளது. இதனால் சேர்த்தே ரசீது வழங்கப்பட்டு வந்தது. இதனால் மத்திய, மாநில அரசு பொருட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனை தீர்க்கும் வகையில்  ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.இதன்படி மத்திய  ,மாநில அரசுகளின் பொருட்களுக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் விரல் பதிவு கைரேகை

இது குறித்து  தமிழகத்தில் உள்ள அனைத்து  மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஜனவரி 1 முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாநில அரசின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட  வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக விநியோகிக்கப்படும் 20 கிலோ அரிசியில்  மத்திய அரசு வழங்கும் 15 கிலோவுக்கு தனி ரசீதும், மாநில அரசு வழங்கும் 5 கிலோ அரிசிக்கு தனி ரசீதும் வழங்க வேண்டும்.  இந்த புதிய விதிமுறையை கடைபிடிக்காமல் விநியோகம் செய்யும் ரேஷன் கடை ஊழியர்கள் அதற்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்களே  செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web