இந்த பகுதிகளில் ரேஷன் கடைகள் ஷிப்ட் முறையில் மாற்றம்! நேர மாற்றத்தைக் குறிச்சுக்கோங்க!

 
ரேஷன் விரல் பதிவு கைரேகை

 இந்தியாவில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கேரளாவில் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் டிசம்பர் 26  முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேஷன் பொருட்களை உடனே வாங்கும் பொருட்டு தற்போது ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டிசம்பர் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை.

ரேஷன்

அனைவருக்கும் சீரான முறையில் பொருட்கள் வழங்கிட ரேஷன் கடைகள் ஷிப்ட் முறையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவ்வகையில் பத்தனம்திட்டா, வயநாடு, ஆலப்புழா, கொல்லம், பாலக்காடு,திருச்சூர், மலப்புரம்  ஆகிய 7 மாவட்டங்களுக்கான பொருட்கள் விநியோகத்திற்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 முதல் 10 ம் தேதி  மற்றும் டிசம்பர் 19 முதல் 24ம் தேதி வரையிலும்  காலை 8 மணி முதல் பிற்பகல்  1 மணி வரை செயல்படும்.

கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள்

மேலும், டிசம்பர் 12 முதல் 17 மற்றும் 26 முதல் 31 வரை  பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரை செயல்படும். இதேபோல், கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், காசர்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 12 முதல் 17 மற்றும்  டிசம்பர் 26 முதல் 31 வரை காலை நேரத்திலும், டிசம்பர் 5  முதல் 10ம் தேதி மற்றும்  டிசம்பர்  19ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிற்பகல் நேரத்திலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web