என்னை மன்னிச்சிடுங்க!! பகிரங்க மன்னிப்பு கேட்டு கதறிய பிரதமர்!!

 
rishi

இந்தியாவை பொறுத்தவரை சட்டங்கள் கடுமையானவை தான். ஆனா அதை கடைப்பிடிக்க சொல்லி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்ற ரீதியில் தான் குடிமகன்கள் உள்ளனர். உலகின்  மற்ற நாடுகளில் அப்படி கிடையாது. சட்டத்தை கடைப்பிடிக்கல்லனா யாரா இருந்தாலும் தண்டணை தான். அபராதம் தான். அதே போல் தான் இங்கிலாந்தில் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.

அதை கட்ட தவறியவர்களுக்கு கடுமையான தண்டணைகளும் உண்டு.  இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் இங்கிலாந்து முழுவதும் காரில் பயணம் செய்து 100க்கு மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரபடுத்துவதற்காக சென்றிருந்தார். அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில் பயணித்தப்படியே கேமிராவை பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.  இந்த வீடியோவில் பிரதமர் ரிஷிசுனக் காரில் சீட் பெல்ட் அணியவில்லை. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த செயலுக்கு ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டு உள்ளார். இது குறித்து அவருடைய  செய்தி தொடர்பாளர் தெரிவித்து  ஒரு சிறிய கிளிப்பை படமாக்க பிரதமர் தனது சீட் பெல்ட்டை கழற்றினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது. தன்னுடைய தவறை அவர்  முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்ள்ளார்.  காரில் செல்லும் போது அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது அவசியம் தான் என பிரதமர் தெரிவித்ததா செய்திதொடர்பாளர் கூறியுள்ளார். 

பிரிட்டனின் 57ஆவது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமர் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் மீது இந்தியர்களுக்கும் ஒருவித எதிர்பார்ப்பு உருவானது.

பிரிட்டனில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை இவர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியே மூலம் பேசினார். அந்த வீடியோவில் ரிஷி சுனக், காரில் 'சீட் பெல்ட்' அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது வைரலாக பரவியதுடன், பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர். 

rishi

இந்த நிலையில், சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பும் கோரினார். தவறை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

 

From around the web