நெகிழ்ச்சி! இரும்பு மனிதர்களின் கரும்பு சுவை.. ஆர்வமுடன் குவிந்த பொதுமக்கள்!

 
கரும்பு திருச்சி சிறை

திருச்சி  மத்திய சிறை தோட்டத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் இந்த பொங்கல் விழாவுக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  விலையும் குறைவும், தரமும் அதிகளவில் திருப்தியாக இருந்ததால், பொதுமக்கள் இந்த கரும்புகளை வாங்க ஆர்வமுடன் குவிந்தனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறைத் தோட்டத்தில் சுமார் 24 ஏக்கர் நிலப்பரப்பாவில் மா, பலா, வாழை, தென்னை, நெல்லி, கொய்யா போன்றவையும் தக்காளி, கத்தரிக்காய், பூசனைக்காய், முள்ளங்கி, பின்ஸ், அவரைக்காய், புடலங்காய், பரங்கிக்காய் போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கடந்த மார்ச் மாதம், திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் ஜெயபாரதி தலைமையில் கரும்பு பயிரிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.  

திருச்சி சிறை

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் அறுவடை திருநாள். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சிறைவாசிகளை கொண்டு கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு வந்துள்ளது. மத்திய சிறை வளாகத்தில் பயிரிடப்படும் கரும்பை சிறை அங்காடி மூலமாக பொதுமக்கள் வாங்கி செல்வதற்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது... பொதுமக்களிடையே இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரும்பு விற்பனையானது அரசுக்கு லாபம் ஈட்டும் வகையிலும்  மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையிலும் கரும்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரும்பு விற்பனையில் வரும் ஒரு பகுதியை சிறைவாசிகளுக்கு ஊதியமாக வழங்க இருக்கிறோம். மேலும் மத்திய சிறை வளாகத்தில் வழங்கப்படும் கரும்பை ஆண் சிறைவாசி, பெண் சிறையில் இருக்கும் பெண் சிறைவாசிகளுக்கு வழங்க இருக்கிறோம்.சிறையில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு மன அழுத்தம் இன்றி இங்கு பணி புரியவும் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே சென்ற பின்னரும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இந்த முயற்சி இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டார்.

திருச்சி சிறை கரும்பு விவசாயம்

விலையும் குறைவாகவும், தரமும் அதிகமிருந்ததால் பொதுமக்கள் இந்த கரும்புகளை ஆர்வமுடன் வந்து வாங்கி சென்றனர். சப்தமில்லாமல் திருச்சியில் இந்த அங்காடி அதிகளவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரசாயன கலப்பில்லை என்பதால், பலர் காய்கறிகளையும் அதிகளவில் இந்த அங்காடியில் இருந்து வாங்கி செல்கின்றனர். திருச்சி  மக்களே... இதைப் பயன்படுத்திக்கோங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க திருச்சியில இருந்தா, இந்த தகவலைச் சொல்லி, அவங்களையும் ஆரோக்கியத்தின் பக்கம் திருப்புங்க.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web