நெகிழ்ச்சி!! இறந்த மனைவியுடன் வாழும் கணவர்!!

 
இந்திராணி

கொல்கத்தாவில் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் 65 வயதாகும்  தாபஸ். இவருடைய மனைவி இந்திராணி. இவர்    ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். தம்பதிகள் இருவரும் இஸ்கான் கோவிலில் தரிசனத்திற்கு சென்ற போது ஒருவேளை தான் உயிரிழந்தால் இந்த கிருஷ்ணர் சிலை போல் தன்னை  செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்திராணி

இதனையடுத்து 2021ல்  கொரோனாவால் உயிரிழந்தார்.  மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது கணவர் ஆன்லைனில் சிலிக்கான் சிலை செய்பவர்களை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் எல்லோரும் மகாத்மா காந்தி, அமிதாப்பச்சன், ஷாருக்கான்  மெழுகு சிலைகளையே  காட்டினர். தாபஸ் தனது மனைவியின் ஆசைப்படி சிலை சிலிக்கானால் வடிவமைக்க வேண்டும் என கேட்டார். இதில் சுபிமல் தாஸ் என்ற சிற்பி சிலிக்கான் சிலையை செய்ய ஒப்புக்கொண்டார்.

இறுதியில் மனைவியின் ஆசைப்படியே 30 கிலோ எடையில் ரூ.2.50 லட்சம் செலவில் இந்திராணியின் சிலிக்கான் சிலை உருவாக்கப்பட்டது. இந்திராணியின் சிலை தாபஸ் வீட்டு வராண்டாவில் சோபாவில் உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இதனை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இது குறித்து தாபசிடம் கேட்டபோது இந்த சிலை மூலம் என் மனைவி எப்போதும் என்னுடனேயே இருக்கிறாள் என்ற உணர்வு வருகிறது என்கிறார் கண்கள் கலங்க. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web