நெகிழ்ச்சி!! சாலை விபத்தில் அடிபட்டவருக்காக பரபர உத்தரவுகளை பிறப்பித்த தலைமை செயலாளர் !!

 
இறையன்பு

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். இவரது திட்ட செயல்பாடுகள் அனைத்தும் மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்று பெரும் வைரலாகி வருகிறது. தலைமைச் செயலாளர் தம் அலுவல் காரணமாக சென்று கொண்டிருந்தபோது சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலம் அருகே நடந்த வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறையன்பு

இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மீது ஆட்டோ இடித்து சென்றது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி சாலையில் கிடந்தார். அந்த வழியாக செல்பவர்கள் அவரை கடந்தபடி அவசர அவசரமாக சென்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில் அந்த  வழியாக வந்த தலைமைச் செயலாளர் இறையன்பு இதனை பார்த்து உடனே வாகனத்தை விட்டு கீழே இறங்கி ஓடிவந்தார். அவரது மொபைல் மூலமே ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.  படுகாயம் அடைந்தவரை ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் அதன் பிறகே தம் அலுவல்களை கவனிக்க கிளம்பினார்.  

போலீஸ்

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த விசாரணையின்படி விபத்தில் காயமடைந்தவர் வேளச்சேரியில் வசித்து வரும் 34 வயது குமரேசன். இவர் பூக்கடை சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆட்டோ மோதிவிட்டதால் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு  தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநரை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். தமிழகத்தின் தலைமை செயலாளர் இறையன்பு  தன்னுடைய பிசியான காலை நேரத்திலும் சாலை விபத்தால் காயம் அடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு , காவல்துறைக்கும் தகவல் அளித்த பிறகே கிளம்பி சென்றது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web