அடுத்தடுத்து நான்கு கடைகளில் கொள்ளை! 11 பவுன் தங்க நகைகள் 10 கிலோ வெள்ளி திருட்டு!

 
நகை கொள்ளை

சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (48). அதே தெருவை சேர்ந்தவர்  பிரபு (36). இவர்கள் இருவரும் ஆலமரம் அருகே உள்ள தெற்கு மாரியம்மன் கோவில் தெருவில் அடுத்தடுத்து நகைக் கடைகள் வைத்து நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர்  இன்று அதிகாலையில் நகை கடைக்கு எதிரே வசிக்கும் சுந்தர்ராஜ் என்பவர் எதிர்பாராத விதமாக வெளியே வந்த போது, இரண்டு நகைக் கடைகளின் பூட்டுக்களும் உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனே இது பற்றி நகைக்கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் அங்கு சென்ற பாஸ்கரன் மற்றும் பிரபு ஆகியோர் உடனே துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பாஸ்கரன் என்பவரின் நகைக்கடையில் வெள்ளி 10 கிலோ, தங்க நகை ஐந்து பவுன் ஆகியவையும், பிரபு என்பவரின் நகைக்கடையில் வெள்ளி ஐந்து கிலோ, ஆறு பவுன் தங்க நகையும் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

சிசிடிவி

இதே போன்று அதே தெருவில் உள்ள ராமஜெயம் என்பவரின் நகைக்கடை மற்றும் தெற்கு மாரியம்மன் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு திருட முயன்றி இருப்பதும் தெரிய வந்தது. இதே போன்று மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள முகமது ஆதம்ஸ் (38) என்பவரின்  பாலித்தீன் பைகள் விற்பனை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் கல்லாவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் ஆகியவற்றையும், இந்த கடைக்கு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் பூட்டு  உடைக்கப்பட்டு அங்கும்  5000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு சென்றிருப்பதும் தெரிய வந்தது.

துறையூரின் நகரப் பகுதியில் நகைக்கடையில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக உடனடியாக திருச்சியில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் நகைக்கடையில் இருந்து மார்க்கெட் வழியாக சென்று அங்கிருந்து யாரையும் கவ்வி பிடிக்காமல் மீண்டும் நகைக் கடைக்கே திரும்பி விட்டது. துறையூரில் நகரப் பகுதியில் ஒரே நாள் இரவில் இரண்டு நகைக் கடைகளில் 15 கிலோ வெள்ளி மற்றும் 11 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

இந்நிலையில் அதே நாளில் ஆதம்ஸ் என்பவருக்கு சொந்தமான பாலித்தீன் கடையில் மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது அக்காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web