மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ2000! அதிரடி அறிவிப்பு!

 
ரூபாய் இல்லத்தரசி

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுகவின் வாக்குறுதிகளில் பெரும் அட்ராக்‌ஷனாக இருந்தது, மாதந்தோறும் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும் என்பதும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதும் தான். நீட் தேர்வை ரத்து செய்யவே இயலாது என்கிற புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தாமல், மாணவர்களின் எதிர்கால கனவுகளுடன் அரசியல் செய்து வெற்றி பெற்றார்கள். பெருவாரியாக வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்து வருடங்களைக் கடந்த போதும், இன்னும் மாதந்தோறும் ரூ.1000 வாக்குறுதி காற்றில் பறக்கிறது. கஜானாவில் பணமில்லாத நிலையில், செஸ் ஒலிம்பியாட், கலைஞருக்கு கடலுக்குள் நினைவு சின்னம், இத்யாதி.. விஷயங்களை எல்லாம் முடித்து விட்டு வருவார்கள் போல..

புதுவையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் செயல்முறைக்கு வடிவம் பெற்றுள்ள நிலையில், தற்போது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி, இதே மாதந்தோறும் பணம் வழங்கும் வாக்குறுதி பார்முலாவை கர்நாடகாவில் பயன்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி  கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2000 திட்டத்தை அறிவித்துள்ளது. 

பிரியங்கா காந்தி அதிரடி கைது! பரபரக்கும் தொடர் சம்பவங்கள்!

இந்த அறிவிப்பு கர்நாடக இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கெனவே 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடகவை பொறுத்தவரை தற்போது பிஜேபி சார்பில் பசவராஜ் பொம்மை முதல்வராக ஆட்சி புரிந்து வருகிறார். மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க அனைத்து வகைகளிலும் முனைப்பு காட்டி வருகிறது. முதல் கட்டமாக 'மக்கள் குரல்' யாத்திரை என பிரச்சார பயணத்தை  தொடங்கியுள்ளது. இந்த யாத்திரை பெலகாவி மாவட்டத்தில்  அதாவது 1924ல்  மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற இடத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒரே பேருந்தில் சிவக்குமார் மற்றும் சித்தராமையா யாத்திரை மேற்கொள்வார்கள்

இந்த யாத்திரை கர்நாடகம் முழுவதும்  22 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.  இந்த யாத்திரையில் பாஜகவின் தவறுகள் குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  29ம் தேதிக்கு பிறகு  காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சிவக்குமார் தென் மாவட்டங்களிலும், சித்தராமையா வட மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொளவர். ஏற்கெனவே இலவசம் என்பதற்கு கடும் எதிர்ப்புகளை பாஜக தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸின் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பிற்கு கர்நாடக முதல்வர் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில்  "இந்த அறிவிப்பு காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மையையும், பகுத்தறிவற்ற தன்மையையும் காட்டுகிறது. தேர்தல் வெற்றிக்காக மட்டுமே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பணம்

இந்நிலையில் தற்போது இரண்டாவது அறிவிப்பாக பிரியங்கா காந்தி  குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிரடி முன்னதாக நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் ஏகப்பட்ட இலவசங்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் இதே வாக்குறுதியை கொடுத்து தான்  ஆளும் பாஜக அரசை வீழ்த்தி சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில்  குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால்  தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால்  கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி  என  பல்வேறு காரணங்களால் இத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் பிரியங்காவும்  இதே திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இந்த வாக்குறுதியால் பெண்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளலாம் என காங்கிரஸ் வலைவிரிக்கிறது.  

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

 

From around the web