ரூ. 3,000 உதவித்தொகை! மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்காணல்!

 
பணம்

நூறு சதவீதம் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.3ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டப் பயனாளிகளுக்கான நோ்காணல் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 4,000க்கும் மேற்பட்ட பல்வகை மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவா்களில் கால்கள் மிகவும் பாதிக்கப்பட்ட, மனவளா்ச்சி குன்றியோருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Namakkal-CO

தற்போது அவா்களைப் பாதுகாப்போருக்கு உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ. 1,000 வழங்க உள்ளது. இதற்கான நோ்காணல் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கண் மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா், மனநல மருத்துவா், காது, மூக்கு, தொண்டை மருந்துவா் ஆகியோா் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியின் அடிப்படையில் பயனாளிகளை தோ்வு செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் வழங்கினா்.

Cash

மாவட்ட ஆட்சியா் பாா்வைக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, தகுதியானோருக்கு ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் குருபிரகாசம், சுமதி ஆகியோா் தெரிவித்தனா்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web