ரூ. 30,000 கோடி நிதி ஒதுக்கீடு! காவிரி, வைகை, தாமிரபரணியை துாய்மைப்படுத்தக் கோரி வழக்கு!

 
காவிரி ஆறு வைகை தாமிரபரணி

மதுரை பொதும்பு அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது  நாட்டில் உள்ள முக்கிய நதிகளைத் தூய்மைப்படுத்தவும், பாதுகாக்கவும் மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாயில் கங்கை தூய்மைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 408 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 228 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. 132 திட்டங்கள் பல நிலைகளில் உள்ளன. கங்கை துாய்மை திட்டத்தில், 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு 2017 முதல் 2022 வரை 9 ஆயிரத்து 895 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

திருச்சி காவிரி அழகர்

தமிழகத்தில் வைகை, காவிரி, தாமிரபரணி ஆகிய முக்கிய நதிகளை துாய்மைப்படுத்த, தேசிய கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கவும் அல்லது வைகை உட்பட 3 நதிகளை தூய்மைப்படுத்த சிறப்புத் திட்டம் அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் புஷ்பவனம் கூறியுள்ளார்.

காவிரி பாலம் திருச்சி

இந்த மனு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web