ரூ. 71,000 வரை சம்பளம்.. 761 காலிப்பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

 
டிஎன்பிஎஸ்சி

வேலை இல்லை.. கிடைக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த தேர்வுகளைப் பற்றி எல்லாம் கண்டுக்கொள்வதில்லை. தொடர்ந்து நான்கைந்து தேர்வுகளுக்கு தயாராகி, எழுதினால் நிச்சயமாக வெற்றி பெறலாம். ரூ.71,000 வரையில் சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி  வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC

காலிப்பணியிடங்கள்:

சாலை ஆய்வாளர் - 761 பணியிடங்கள்

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

ஐ.டி.ஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; சிவில் படிப்பில் பட்டயம் பெற்ற விண்ணப்பத்தாரக்ளுக்கு முன்னுரிமை

தேர்வு செயல் முறை:

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் எழுத்துத் தேர்வுதாள் 1: பாடத்தாள் (தொழிற்பிரிவு தரம்)தாள் 2: பகுதி அ: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வுபகுதி ஆ : பொது அறிவு

உஷார்!! இனி TNPSE, VAO, குரூப் 4 தேர்வுகளில் இது கட்டாயம்!! டிஎன்பிஎஸ்சி அதிரடி!!

சம்பள விவரம்:

சாலை ஆய்வாளர் பதவிக்கு மேற்கண்ட செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 19,500 - 71,900 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: 

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். டிஎன்பிஎஸ்சி ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150 ஆகும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுள்ள  மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -யில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தகுதியில்லாத, காலம் கடந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்:  11.02.2023

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web