பொங்கல் தொகுப்புகளோடு அனைவருக்கும் ரூ.1000/- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

 
பொங்கல் முதல்வர் ஸ்டாலின்

இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில், தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்புகளோடு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைக்கிறார்.

பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ1000  ரொக்கப் பணம், முழுகரும்பு ஆகியவை  வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான டோக்கன்கள் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறப்பு தொகுப்புகளை இன்று வழங்கி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் தொகுப்புகளில் அறிவிக்கப்பட்டிருந்த அரிசி, சா்க்கரை ஏற்கனவே நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், தாமதமாக கரும்பும் பொங்கல் தொகுப்பில் சேர்க்கப்பட்டதால், முழு நீளக் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள  ரேஷன் கடையில் இத்திட்டத்தை தொடக்கி வைக்கிறாா். இதே நேரத்தில் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு ஜனவரி 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளது

பொங்கல்

தமிழகத்தில்  ஒவ்வொரு ஆண்டும் தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு  தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பொங்கல் தொகுப்பு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. புது உத்தரவாக பயனாளர்களுக்கு செங்கரும்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்காக ஜனவரி 2ம் தேதி தொடங்க இருந்த நிலையில்  ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

இதன் காரணமாக வீடு வீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த டோக்கன் விநியோகமும் தாமதமானது. இத்தனைக் குளறுபடிகளையும், எதிர் கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்கொண்டு விமர்சித்திருப்பார் என்று நக்கலாக சிரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமா என பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

முன்னதாக கரும்பு உட்பட பொங்கல் சம்பந்தமான பொருட்கள் இல்லாமல் பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஆரம்பத்தில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பி றகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினா போதும்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web