ரூ.800 கோடி டெண்டர்... முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வழக்கில் இன்று தீர்ப்பு!

 
விஜயபாஸ்கர் ரெய்டு வேலுமணி

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணி கோவை மாநகராட்சி பணிகளில் 800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைப்பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் நீதிபதிகள் பி. என். பிரகாஷ்,  ஆர். எம்.டீக்காராமன் அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு எழுந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சென்னை, கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக 800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

எஸ் பி வேலுமணி அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.  டெண்டர் வழங்க விதிகள் மாற்றியமைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.

h

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி, டென்டர்கள் வழங்கியதில் 800 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  இதையடுத்து அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்தது. இந்த டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு தொடர்பாக எஸ். பி .வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்பி வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த எட்டாம் தேதி அன்று நீதிபதிகள் பி .என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தமிழக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்குகளை பதிவு செய்திருப்பதாக வாதிட்டார்.  

வேலுமணி

பின்னர் தமிழக அரசு சார்பில், வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும் அதிமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டது என்று வாதிட்டது.   அறப்போர் இயக்கத்தின் சார்பில்,  இந்த டெண்டர் முறைகேடுகளுக்கு துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் .  அது கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல் தற்போதைய எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் வாதிட்டது.  இந்த சூழலில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ் .பி. வேலுமணி தொடர்ந்து வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்க இருக்கிறது .

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web