நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை..! பகீர் வீடியோ!

 
நடுரோட்டில் கொலை

பட்டப்பகலில் நடுரோட்டில் விரட்டி விரட்டி, கூலி தொழிலாளியை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பல் தொழிலாளியைத் துரத்திச் சென்று படுகொலைச் செய்யும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், புரனாபூல் 100 அடி சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கூலி தொழிலாளி ஒருவரைத் தாக்கி உள்ளனர். நடுரோட்டில், பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரமான சம்பவத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்களில் சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ள வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.


சம்பவத்தின் வீடியோக்களில், மூன்று பேர் ஒருவரைத் தாக்குவதும், அவரை சாலையில் தள்ளிவிட்டு ஆயுதங்களால் தாக்குவதும் காணப்படுகிறது. மூன்று தாக்குதலாளிகளில், ஒருவர் பாதிக்கப்பட்டவரைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம், மற்ற இருவரும் அவரை கண்மூடித்தனமாக அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கினர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

murder

ஐதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த காட்டுமிராண்டித்தனமான கொலை குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் ஆதார் அட்டை விவரத்தின்படி, அவர் கோத்தி இஸ்தாமியா பஜாரை சேர்ந்த ஜங்கம் சாய்நாத் (32) என போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆகாஷ், தில்லு, சோனு ஆகியோரை மேற்கு மண்டல அதிரடிப்படை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web