தாயின் கண்ணெதிரே சோகம்!! ஒன்றரை வயது குழந்தை மெஷினில் சிக்கி உயிரிழப்பு!!

 
மனிஷா

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  ஒலப்பாளையத்தில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் தேங்காய் நார் மில்  நடத்தி வருகிறார். இந்த மில்லில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பீகாரில் வசித்து வரும் பஞ்சாரம், அவரின் மனைவி மனிஷா தேவி குடும்பமாக பணிபுரிந்து வருகின்றனர்.

குழந்தை உயிரிழப்பு

இவர்களின் குழந்தை ஒன்றரை வயது தீஷ்குமார். நேற்று மனிஷா தனது குழந்தையை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென குழந்தை தாயின் மடியிலிருந்தவாறே ஓடிக்கொண்டிருக்கும் மிஷனின் பெல்ட்டை பிடித்துவிட்டது. இதனால் மிஷினுக்குள் குழந்தை இழுத்து செல்லப்பட்டது.
தாயின் கண்ணெதிரே மிஷினில் சிக்கி அரைக்கப்பட்டது .

போலீஸ்

உடனடியாக மிஷினை நிறுத்திவிட்டு  குழந்தையை மீட்டு  நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தாயின் கண்ணெதிரே குழந்தை மிஷினில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web