சஹானா.. ‘கிக்’ ஏறுதே.. இளம்பெண்ணுடன் நெருக்கமான அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி! லீக்கான புகைப்படங்களால் சலசலப்பு!

 
இன்பநிதி

இளம் பெண்ணுடன் தமிழகத்தின் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக்காகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கால்பந்தாட்ட விளையாட்டின் மீது தீராத காதலில் இருக்கும் இன்பநிதி, சந்தடி சாக்கில் வேற விளையாட்டிலும் ஈடுபடுகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில்  இன்பநிதி, கால்பந்தாட்டப் போட்டிக்காக ஸ்பெயினுக்கு சென்றிருந்தார். இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் சஹானா என்று கூறப்படுகிறது..

சஹானா, இன்பநிதியின் காதலி என்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சஹானா இன்பநிதியின் காதலியாக இருக்கும் பட்சத்தில், அது அவரது சொந்த விருப்பம். ஆனால், இந்த புகைப்படங்களை லீக்  செய்து மலிவான அரசியல் செய்கிறது பாஜக அண்ணாமலை என்று கொந்தளித்திருக்கிறார் சமீபத்தில் பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்.


இந்த புகைப்படம் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என எந்த விவரமும் தெரியாத நிலையில், இந்த புகைப்படத்தில் சஹானாவை கட்டிப் பிடித்தபடி இன்பநிதி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இன்பநிதி
அப்படியிருக்கையில், இந்த புகைப்படங்களை வைத்து, புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறார்கள் என்கிறார் காயத்ரி ரகுராம். அவரது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில்  "தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை" என பதிவிட்டுள்ளார். மேலும், "ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை வேறு ஒருவர் பகிரக்கூடாது. இந்த வகையான  தாக்குதல் மிக மிக கேவலமானது. அண்ணாமலை யாரையாவது அரசியல் ரீதியாக தான் தாக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web