சம்பள பணம் பத்தலை! ரூ.5000 லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் கைது!

 
மாலதி திருச்சி போலீஸ்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் என்பவரின் மீது கடந்த 2.11.2022 அன்று போஸ்கோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.மாலதி என்பவர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

மகளிர் காவல் நிலையம்

இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இந்த வழக்கிற்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் ஆய்வாளர் மாலதி, யுவராஜாவிடம் ரூபாய் 5000 லஞ்சமாக பணம் கேட்டுள்ளார். மேலும் லஞ்ச பணத்தை இன்று டிசம்பர் 13ம் தேதி காலை காவல் நிலையத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறியுள்ளார்.

காவலர்களிடம் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்று அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி திரு.மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில் யுவராஜிடமிருந்து இன்ஸ்பெக்டர் மாலதி ரூபாய் 5000 லஞ்சமாக பெற்ற போது இன்று காலை 10 மணி அளவில் கையும் களவுமாக பிடிபட்டார்.  இன்ஸ்பெக்டர் மாலதி மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சியில் தொடர்ந்து இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லால்குடி

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்குபவர்களின் வழக்குகளை ஒரு வருட காலத்திற்குள் விசாரித்து நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே இது போன்று நடக்கும் குற்றங்களை தடுக்க முடியும் என்கிறார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான அலெக்ஸ். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web