கட்சியை காப்பாத்துங்க தலைவா!! சர்ச்சை சுவரொட்டியால் பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
அன்வர்ராஜா

இன்று ஜனவரி 17ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள். இதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அவரின் நினைவிடத்திலும், உருவப் படங்களுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன்  பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டிகளையும் ஒட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அன்வர்ராஜா

இந்நிலையில்  அன்வர் ராஜா ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர்-ன் 106 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட்டது .இந்நிலையில் அதிமுகவில்  அதிமுகவில் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த அன்வர்ராஜா சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சர்ச்சையான வாசகங்களுடன்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அதிமுக கட்சி தலைவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றங்களில் போராடு வருகின்றனர். தலைவா  கட்சியைக் காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம் என  வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 


அதிமுக பொதுக்குழு குறித்த  வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்  அன்வர் ராஜா தரப்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் சும், ஓபிஎஸ் சும் ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் துரத்தி அடிக்கப்பட்டனர்.  அந்த வகையில் ஜெயலலிதாவின் தீவிர  விசுவாசியாக இருந்த அன்வர் ராஜா சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார்.

இரட்டை தலைமை தொடருமா..? இன்று கூடும் அ.தி.மு.க செயற்குழு கூட்டம்..!!

 அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தில்  சிவி சண்முகம் அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்ததாகவும், அவரை சக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கட்டுப்படுத்தியதாகவும்  தகவல்கள் வெளியான நிலையில்  அன்வர்ராஜாவை  கட்சியின் செயற்குழுவுக்கு முன்னதாக  கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவித்தனர். அதன் பின்னர் அரசியல் நிகழ்வுகளில் தலைகாட்டாமல் இருந்து வந்த அன்வர் ராஜா  எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாளில் சர்ச்சை போஸ்டர் ஒன்றை ஒட்டி பரபரப்பை உருவாக்கினார். அதில் "தலைவா,ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கிறது, நாங்கள் பதறி துடிக்கின்றோம் காப்பாற்றுங்கள்" என  அச்சிடப்பட்டிருந்தது. இந்த வாசகங்கள் அப்போதே பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில் தற்போது பிறந்தநாளுக்கு மீண்டும் சர்ச்சை வாசகங்களை பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web