செம.. குட் நியூஸ்.. பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! அரசாணை வெளியீடு!

 
தமிழக அரசு

ஊரோடு ஒத்து வாழ பழகிக்கொள்ள் வேண்டும் என்பதென்னவோ உண்மைதான் உலகம் முழுவதும் மாசுக்கட்டுப்பாட்டுக்கு காரணமான பெட்ரோல் டீசல் வாகனங்களை புறம் தள்ளிவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி உலக மக்கள் தேட்டலைத்தொடங்கிவிட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்களும் வெளிவரத் தொடங்கி விட்டன.  இந்நிலையில் தமிழக உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி நேற்று பிறப்பித்த அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் கூறப்பட்டுள்ளதாவது...

பேட்டரி வாகனம் இரு சக்கர ஸ்கூட்டர்

நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீதம் வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும் எல்லா பேட்டரி வாகனங்களுக்கும் (மின்சார வாகனங்கள்) 100 சதவீதம் விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுகிறது.

பேட்டரி வாகனம் இரு சக்கர ஸ்கூட்டர்

தமிழக மின்சார வாகனக் கொள்கை 2019ன்படி பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்க போக்குவரத்து ஆணையரகம் கேட்டுக்கொண்டது அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு  டிசம்பர் 31 வரையில் பேட்டரியால் இயக்கப்படும் எல்லா வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிடப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் சரி எஜமான்.. சம்மர் தொடங்கப் போகுதே மின்சாரத் தேவை அதிகமாகிடுமே? மின்சாரம் தடை இல்லாம கிடைக்குமா? என்பதே மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது? இ-கூட்டர்களுக்கான சார்ஜ்ஜிங் நிலையங்களும் அதிகளவில் இல்லாததாலும், பேட்டரியில் இயங்கக்கூடிய வாகனங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெடித்து விபத்து ஏற்படுவது குறித்து இதுவரையில் சரியான விளக்கங்கள் இல்லாததாலும் பொதுமக்களிடம் பேட்டரி வாகனங்கள் குறித்து அதிகளவில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web