அதிர்ந்த கிராமம்.. ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் எடுத்த பகீர் முடிவு !!

 
ரஞ்சிதா

ஒரே நேரத்தில் சகோதரிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவை சேர்ந்த சகோதரிகள் ரஞ்சிதா (24), பிந்து (21), சந்தனா (18). இவர்களின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டன. இதனால் இளம்பெண்கள் மூன்றுபேரும் பாட்டி வீட்டின் வளர்ந்துவந்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு பாட்டியும் உயிரிழந்து விட்டார். இதனால் அடுத்து துணைக்கு யாரும் இல்லையென பெரும் சோகம், மனஉளைச்சலில் இருந்துள்ளனர் இளம்பெண்கள் மூன்று பேரும்.

ரஞ்சிதா

கடந்த வியாழக்கிழமை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் கதவை திறக்க முயன்றனர். எனினும் உள்பக்கமாக தாள்ப்பாள் போடப்பட்டிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.

பின்னர் வீட்டில் மேற்கூறையை அகற்றி பார்த்த போது மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பின்னர் சகோதரிகள் மூன்று பேரின் உடல்களை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரம், சகோதரிகள் மூவர் உயிரிழப்புக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா?, இதில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்..

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web