செல்போனில் பேசியபடி சென்ற ஷாலினி! திடீரென வேகமெடுத்த ரயில்.. பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

 
ஷாலினி

எப்போதுமே கவனமாக வர்ற பொண்ணு தாங்க என்று கதறியழுது அரற்றுகிறார்கள் உறவினர்கள். செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றால் விரைவாக வீட்டிற்கு சென்று விடலாம் என்று திட்டம் போட்ட ஷாலினியின் கனவை சிதைத்திருக்கிறது காலம். திடீரென எதிர்பாராத வேகமெடுத்த ரயில் மோதி, உயிரை இழந்திருக்கும் ஷாலினிக்கு வயது 27. அவரோடு, அவரது கனவுகளும் தூர்ந்து போனது.

சென்னை ஏர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (27). இவர் கல்லூரி படிப்பை  முடித்து விட்டு ஆவடி அருகே உள்ள ப்யூட்டி பார்லர் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் ரயிலில் ஆவடிக்குச் சென்று பணி முடித்து விட்டு, இரவு வீடு திரும்புவது ஷாலினியின் வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல் வேலை முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார ரயில் பயணம் செய்து விம்கோ நகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார் ஷாலினி.  

dead

ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வரையில் தனது அண்ணனுடன் செல்போன் பேசி கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஒரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார்  ஷாலினி. அப்போது விரைவு ரயில் வந்ததை எதிர்பார்க்காத ஷாலினியின் மீது ரயில் மோதியது. உடலில் பலத்த காயம் அடைந்த நிலையில் ஷாலினி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

ஷாலினியின் குடும்பத்தார் வெகு நேரமாகியும் அவர் செல்போனை எடுக்காததால் விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தேடி பார்த்த போது அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாலினியை  மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்கும் படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Wimco

அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அனுமதிக்கப்பட்டு பின் மருத்துவர்கள் ஷாலினியை  பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web