500 பேரை பணிநீக்கம் செய்த ஷேர்சாட்!! கதறி துடிக்கும் ஊழியர்கள்!!

 
ஷேர்சாட்

கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'ஷேர் சேட்' நிறுவனம் சமீபத்தில் தனது ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி மொத்த ஊழியர்களில் 20 சதவிகித ஊழியர்களை நிறுவனம் வேலையை விட்டு அனுப்புவதாக அறிவித்துள்ளது. ஷேர்சாட்டில்  சுமார் 2,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் இதிலிருந்து சுமார் 500 பேர் வரை வெளியேற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம், நிலுவைத்தொகை படிப்படியாக கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேர்சாட்


வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்திகளை உடனுக்குடன் பகிரும் செயலி ஷேர்சாட். இந்நிறுவனம் சமீபத்தில்  கூகுள் மற்றும் டெமாசெக் மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. பொருளாதாரச் சரிவு காரணமாக செலவினங்களைக் குறைக்கும் வகையில், முதலீட்டாளர்களிடமிருந்து வந்த அழுத்தத்தை குறைக்கும் வகையிலும்  ஷேர்சாட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 20% ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.  

ஷேர்சாட்

இது குறித்து ஷேர்சாட் தலைமை நிர்வாகி அங்குஷ் சச்தேவா வெளியிட்ட  செய்தி குறிப்பில், "தற்போதைய உலக பொருளாதார சரிவு காரணமாக, இந்த துரதிர்ஷ்டவசமான முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் செலவை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஷேர்சாட் 5 பில்லியன் டாலர் மதிப்புடையது. இங்கு சுமார் 2,200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web