அதிர்ச்சி!! 15 மயில்கள் விஷம் வைத்து கொலை!! திடுக்கிடும் பிண்ணனி!!

 
மயில்கள்

இந்தியாவின் தேசிய பறவை மயில் . இதனை வீடுகளில் வளர்ப்பது, பிடிப்பது , இவைகளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் 15 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்து  கிடந்தன. இது குறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும்  தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மயில்கள்

கடலைக்காட்டில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விஷஅரிசியை சாப்பிட்ட மயில்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து  வனத்துறையினர் இறந்த மயில்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு தக்க மரியாதையுடன் காப்புக்காடு பகுதியில் புதைக்கப்பட்டன. இச்சம்பவம்  குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் மயில்கள் இறந்து கிடந்த இடமான   கடலைக்காட்டின் உரிமையாளர் அஞ்சல்காரன்பட்டி  பிச்சையிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மயில்கள்

அதில் அவர்  தனது தோட்டத்தில் எலிகளில்  தொல்லையை ஒழிக்க விஷம் கலந்த அரிசியை வைத்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் அதனை  தவறுதலாக மயில்கள் திண்றதால் அவை உயிரிழந்து விட்டதாக பிச்சை தெரிவித்தார். இதன் அடிப்படையில் பிச்சையை வனத்துறையினர் கைதுசெய்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  விஷம் கலந்த அரிசியை தின்று 15 மயில்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!