அதிர்ச்சி!! பீடா கடைகளில் போதை சாக்லேட்டுகள்!!

 
சாக்லேட்

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். கட்டிடம் கட்டுவது தொடங்கி பாணிப்பூரி விற்பனை வரை அவர்கள் தான் கல்லா கட்டி வருகின்றனர். தமிழக இளைஞர்கள் படித்து முடித்து விட்டு பெங்களூர், ஹைதராபாத், ஆந்திரா அல்லது அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சென்று கொண்டிருக்கின்றனர். இது வளர்ச்சியா, குளோபலைசேஷன் என தீர்மானிக்கும் முன் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவர்கள் வைப்பது தான் சட்டம் என்ற அளவில் பல குற்றச்சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

சாக்லேட்

அதன் ஒரு பகுதியாக பீகாரில் இருந்து போதை கலந்த சாக்லேட்டுகளை வரவழைத்து அதை இங்கிருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே அமைந்திருக்கும் கடைகளில் சப்ளை செய்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஜாம் பஜாரில் உள்ள பீடா கடையில் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில்  போதை சாக்லேட் விற்பனை செய்வது உறுதிசெய்யப்பட்டது.

போலீஸ்

இதனையடுத்து கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகளை  காவல்துறை  பறிமுதல் செய்ததுடன்  விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  பீடா கடை நடத்தி வந்தவர் பீகார் மாநிலத்தில் வசித்து வரும் சுரேந்தர் யாதவ் என்பது தெரியவந்தது.  அவர் பீகாரிலிருந்து போதை சாக்லேட்டுகளை வரவழைத்து, சென்னையில் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. பீகாரில் இருந்து கஞ்சா,போதை கலந்து சாக்லேட்டுகளை வாங்கிவந்து சவுகார்பேட்டை பகுதியில் விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web