அதிர்ச்சி!! ”இப்படி ஒரு முடிவை எடுப்பேன்னு நினைக்கலையே”!! இளம் நடிகர் விஷம் குடித்து தற்கொலை!!

 
சுதிர்

திரையுலகில் இளம் நடிகர்கள் மன அழுத்தம் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. டோலிவுட் திரையுலகில் பிரபல நடிகர் 33 வயது சுதீர் வர்மா. இவர் கடந்த வாரம்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2016ல்  வெளியான குண்டனப்பு பொம்மா செகண்ட் ஹேண்ட் படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் ஜனவரி 18ம் தேதி மன அழுத்தம் காரணமாக திடீரென விஷம் குடித்து  உயிருக்கு போராடிய நிலையில், கொண்டாபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சுதிர்

அவருக்கு மருத்துவ வல்லுநர் குழு தீவிர சிகிச்சை  அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு  விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள்  ஜனவரி  20ம் தேதி அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று செவ்வாய்கிழமை ஜனவரி 23ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சுதீர் வர்மா. சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு சுதிருக்கு  பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை .

சுதிர்

அதனால்  கடைசியாக அலைர் எனும் வெப்சீரிஸில் நடித்து வந்தார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எப்படியாவது அவரை காப்பாற்றி விடலாம் என நினைத்து போராடிய நிலையில், விஷம் உடல் முழுவதும் பரவி விட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை குழு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து சுதீர் வர்மாவுடன் குண்டனப்பு பொம்மா படத்தில் இணைந்து நடித்த சக நடிகர் சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படங்களை  பதிவிட்டு  ”நண்பா,  இப்படியொரு முடிவை நீ எடுப்பாய் என நினைக்கவில்லை. மனம் வேதனையடைகிறது” என இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது மறைவிற்கு திரையுலக நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web