அதிர்ச்சி!! திருமண வீடு துக்க வீடாக மாறிவிட்ட சோகம்!! நடனமாடிக் கொண்டே உயிரை விட்ட இளைஞர்!!

 
துக்கவீடு

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழைய காலம். இன்றைய திருமணங்களில் சொர்க்கத்தையே கண்முன்னால் கொண்டுவரத்துடிக்கும் இளசுகள் அளவுக்கு மீறிய உற்சாகத்துடன் நடத்தப்படுகின்றன. இதனால் திருமணநிகழ்வுகளில்  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தின் உச்சம் தொடுகிறது.  இந்த அதீத கொண்டாட்டம் சில நேரங்களில் சுபநிகழ்வுகளில் அசம்பாவிதங்கள் நடைபெற்று விடுகின்றன.

திருமண வீடு

அதே போல் ஒரு சம்பவம்  மத்திய பிரதேசத்தில் நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ரேவா மாவட்டத்தில் நேற்று இரவு திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த 32 வயது நபர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு நண்பர் ஒருவர் உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் வந்திருந்தார்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இவரது பெயர் அபய் சச்சன்.சச்சன் ஒரு குழுவுடன் உற்சாக நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சரிந்து விழுகிறார். இசைக்குழு தன் இன்னிசையை நிறுத்தி விட்டு ஓடோடி வந்து அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடுகிறது. ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். சிறிது நேரத்திற்கு முன் கொண்டாட்டத்தில் இருந்து சுப வீடு இப்போது துக்க வீடாக மாறிவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web