அதிர்ச்சி !! 282 முறை பெற்றோரை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்!! பகீர் பிண்ணனி!!

 
 டேவிட்

மனநோயாளிகளை வீட்டில் வைத்து பார்த்து கொள்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். ஒரு வேளை இரக்கமானதாக தோன்றினாலும் மற்றொரு புறம் அதே அளவு ஆபத்தானவர்களும் கூட என்பதையும் உணர வேண்டும். என்ன உறவு முறையாக இருந்த போதும் தாம் செய்வதை உணராதவர்களை வைத்து பராமரிப்பது கடினமான செயல் தான்.அதிலும் பெற்ற பிள்ளை மன நலம் பாதிக்கப்பட்டாலும் பெற்றோர்கள் அவர்களை வைத்து பராமரிக்க யோசிப்பதே இல்லை.

டேவிட்

அதனால் எந்த ஆபத்து வந்தாலும் அதனை எதிர்கொள்ளவே தயாராக உள்ளனர். ஆனால் சில நேரங்களில் பெரும் ஆபத்தை விளைவித்து விடுகிறது. இங்கிலாந்தின் யார்க்ஷயர் பகுதியில் 37 வயது இளைஞர் தனது தாயையும் தந்தையையும் 282 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மூன்று வெவ்வேறு கத்திகள் கொண்டு இந்த கொலை செய்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் நீதிமன்றத்தில் டேவிட்  ஆஜர்படுத்தப்பட்டார்.  டேவிட் ஜான் மற்றும் பெவர்லியை 282 முறை குத்தினார். இதன் காரணமாக அவர்கள் டிசம்பர் 21, 2021 அன்று உயிரிழந்தனர். 

இங்கிலாந்து
டேவிட் அவரே போலீசுக்கு போன் செய்து , கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இரண்டு உடல்கள்  கிடந்தன. 
இந்த வழக்கு நேற்று (ஜனவரி 20) பிராட்போர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் டேவிட் பல வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், ஆனால் மீண்டும் நோய்வாய்ப்பட்டதில் மருந்து சாப்பிடுவதை நிறுத்தியிருந்தார். டேவிட் தனது தாயாரை  90க்கு மேற்பட்ட முறையும்  , தந்தையை 180முறைக்கு மேலேயும் தாக்கியதாக ஒப்புக் கொண்டார். அவர் வன்முறையுடன் கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ சிகிச்சைகளை முறைப்படி அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web