அதிர்ச்சி! மாடுபிடி வீரர் மரணம்! பாலமேடு ஜல்லிக்கட்டில் சோகம்!

 
அரவிந்த்ராஜன்

தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு இந்த போட்டிகளைப் பார்த்து மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சோகமாக், மாடு முட்டியதில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் படுகாயம் அடைந்து, குடல் சரிந்த நிலையில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மாடுபிடி வீரர் காளை முட்டியதில் காயாமடைந்து, மரணமடைந்தது அந்த பகுதிகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண திரண்டிருந்த  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியைக் காண இன்று வெளிநாட்டில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்த நிலையில், காலை மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் உறுதி மொழி எடுத்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

Pudukottai-jallikattu

இந்தப் போட்டியில் இதுவரை 14 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். துள்ளிக் குதித்து சீறி வரும் காளைகளை காளையர்கள் அடக்கினர். இந்நிலையில், எதிர்பாாத விதமாக காளை முட்டியதில் மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் படுகாயம் அடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Pudukottai-jallikattu

அரவிந்த் ராஜ், அதிக காளைகளை அடக்கிய பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார். 4ம் சுற்றின் நிறைவில் 16 காளைகளை அடக்கிய மணி முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ராஜா உள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web