அதிர்ச்சி!! 2000 விமானங்கள் ரத்து!!மணிக்கணக்கில் காத்திருக்கும் விமான பயணிகள் !!

 
அமெரிக்க விமானம்

உலக அளவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அவசர ஆலோசனைக்கூட்டங்கள், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. 2020ம் ஆண்டு கடுமையான பனிக்காலத்தில் தான் கொரோனா தீவிரமாக பரவத் தொடங்கியது. அதே போல் உலகின் பல பகுதிகளில் கடும் குளிரும், பனிப்பொழிவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க விமானம்

அந்த வகையில் அமெரிக்காவிலும் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவி வருகிறது.  பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு குளிர் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குளிர் மிகப்பெரிய அளவில் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

அமெரிக்க விமானம்

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று  அதே காரணத்தால் சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. பனிப்பொழிவால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், பேருந்து மூலம் மட்டுமே நீண்ட நேரம் பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web