பேரதிர்ச்சி!! ரசிகரின் செல்போனை வாங்கி உடைத்த பிரபல நடிகர்!!

 
ரன்பீர்

பாலிவுட் திரையுலகில் முண்ணனி நட்சத்திரங்களில் ஒருவர்  ரன்பீர் கபூர்.ரன்பீருக்கும், ஆலியாவுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டது  ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ரன்பீரை தொடர்ந்து ஆலியா பட்டும் உடனடியாக தனது பட வேலைகளில் பிசியாகி விட்டார். இருவருக்கும் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்தன. சமீபத்தில் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு முடிந்து வெளியேறியபோது அவருடைய  ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாக கூச்சலிட்டனர்.

ரன்பீர் ஆலியா

அப்போது, ரன்பீரை பார்க்க வந்த ரசிகர்களில்  ஒருவர், அவரை அணுகி தனது மொபைல் போனில்  செல்பி  எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனே ரன்பீரும் சரியென சம்மதித்தார். ஆனால், அந்த நேரம் பார்த்து ரசிகரின் போன் உடனடியாக வேலை செய்யவில்லை. இதனால், மீண்டும் போனை இயக்கி பார்த்து உள்ளார்.  அடுத்தடுத்து 2 முறைகள் இப்படி ஆனாலும்  சுற்றியிருந்தவர்களை அமைதிப்படுத்தி விட்டு புகைப்படத்திற்கு தன்னை ரன்பீர் தயார் படுத்தி கொண்டார். ஆனால், ரசிகரின் மொபைல் போனில் செல்பி எடுக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால், சிறிது நேரம் அமைதியுடன் இருந்த ரன்பீர், பொறுமையிழந்து, ரசிகரின் மொபைல் போனை பறித்து, தனக்கு பின்புறம் தரையில் வீசி எறிந்தார். இதனால் அருகில் இருந்த அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  

சாதாரணமாக  ரன்பீர் கபூர் நகைச்சுவையாக நடந்து கொள்ள கூடியவர். அவரைக் கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்து வந்த நிலையில் ரன்பீரின் இந்த நடவடிக்கையால் குறிப்பிட்ட அந்த ரசிகர் மனமுடைந்து போனார். அவர் நடித்த, பர்பி, வேக் அப் சித், யே ஜவானி ஹை தீவானி படங்களில் கூட  ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.  அவரது இந்த கோபத்திற்கு காரணம்  குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் இருக்கலாம். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது, அவரது வாழ்க்கையின் கசப்பான சம்பவங்களால் அவர் மனக்குழப்பத்தில் உள்ளார். அவர் உடைத்தது ரசிகரின் போனை அல்ல. தனது சிறுவயது கனவு ஹீரோவை பார்க்க ஓடி வந்த ரசிகரின் மனதை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  மேலும் சிலர், இதெல்லாம் ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக நடந்த சம்பவம் எனவும் தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web