அதிர்ச்சி!! ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்று விட்டதால் நோயாளி உயிரிழப்பு!!

 
ஆம்புலன்ஸ்

அவசர மருத்துவ சேவைகளுக்காக அரசின் இலவச மருத்துவ ஊர்தி 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சேவையில் சில நேரங்களில் பல சவால்கள் உருவாகி விடுகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், தனப்பூர் பகுதியில் வசித்து வருபவர் 40 வயது  தேஜ்யா. இவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து விட்டார்.

ஆம்புலன்ஸ்

அக்கம் பக்கத்தில்  இருந்தவர்கள்   108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் இவரை தனப்பூர் மருத்துவமனைக்கு கொன்டு சென்று கொண்டிருந்தனர். ஆனால் பாதி வழியிலேயே  டீசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் நின்றுவிட்டது.  அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸை தள்ளிக்கொண்டே மருத்துவமனை  வரை சென்றனர். ஆனால், அதற்குள்  தேஜ்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

ஆம்புலன்ஸ் டீசல் இல்லாமல் நடுவழியில் நிற்காமல் சரியான நேரத்திற்கு மருத்துவமனை கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாமோ என உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களது கதறல் காண்பவர்களை கலங்க வைத்தது. ஆம்புலன்ஸ் வாகனம் டீசல் இல்லாமல் நின்றது அப்பகுதி முழுவதும்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து கச்சாவாரியாவாஸ் அமைச்சரிடம் கேட்கப்பட்ட போது  இது நிர்வாக கோளாறு. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web