அதிர்ச்சி!! பள்ளி உணவில் பாம்பு!! 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

 
உணவில் பாம்பு

மேற்கு வங்க மாநிலத்தில்  பிர்பூம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவில் பாம்பு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள்  பள்ளி தலைமை ஆசிரியரை தடுத்து நிறுத்தி, தலைமை ஆசிரியரின் பைக்கை உடைத்தனர்.



மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆய்வு செய்தபோது, ​​உணவுப் பாத்திரம் ஒன்றில் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகள் உடனடியாக அருகில் உள்ள ராம்பூர்காட் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஒரு குழந்தை மட்டும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில்  மருத்துவமனையில் உள்ள குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிய உணவு
இது குறித்து மயூரேஷ்வர் வட்டார வளர்ச்சி அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி உணவை சாப்பிட்ட குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்துள்ளன. இது குறித்து மாவட்ட தொடக்கப்பள்ளி ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக பள்ளியில் விசாரணை நடத்தப்படும் என  தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!