அதிர்ச்சி!!பிறந்தநாளில் டிக் டாக் பிரபலம் தற்கொலை!! சோகத்தில் திரையுலகம்!!

 
டிக்டாக்

சர்வதேச அளவில் பொங்கலுக்கு ரிலீசாகியிருக்கும் துணிவு படத்தில் துணைநடிகராக நடித்தவர் டான்சர் ரமேஷ். இவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர்  சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும், விழா மேடைகளிலும் சினிமா பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து டிக்டாக்கில் தனது நடன வீடியோக்களை பதிவிட்டு வந்தார். 

டிக்டாக்
இன்ஸ்ட்ராகிராம் ரீல்சிலும் பதிவிட்டு வந்தார். இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் லைக்குகளை போட்டு வந்தனர். சமூக வலைத்தளங்களில்  பெரிய வரவேற்பு கிடைத்ததால், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இவ்வாறு படிப்படியாக உயர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்றவர். துணிவு படத்திற்கு அடுத்தபடியாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

rip

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று அவருடைய பிறந்தநாளிலேயே அவர்  தற்கொலை செய்துகொண்டு இறந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web