அதிர்ச்சி! 48,500 ஆண்டுகள் உறைந்திருந்த ஜாம்பி வைரஸ்! மீண்டும் புத்துயிர் பெற்றதால் பரபரப்பு!

 
ஜாம்பி

மனித குலத்துக்கு பேராபத்தா என்கிற விவாதம் உலக விஞ்ஞானிகளிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சுமார் 48,500 ஆண்டுகளுக்கு முன்பு உறைந்திருந்த ஜாம்பி வைரஸை, செர்பியாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு கீழே ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதில் பிரமிக்க வைக்கும் சங்கதி, அந்த ஜாம்பி வைரஸ் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது தான் பெரும் அச்சத்தைக் கிளப்பியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று, கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டிருக்கும் நிலையில், இப்போது தான் மக்கள் மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகர துவங்கியுள்ளது. அதே நேரம், மீண்டும் பயத்தில் உறைய வைக்கும் விஷயமாக உலகில் இருக்கும் மற்ற பல்வேறு வகையான வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மறுபடியும் லாக்-டவுன் விதித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே பல ஆண்டுகளாக ஏரியின் கீழ் உறைந்த இருந்த 10-க்கும் மேற்பட்ட வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஆய்வாளர்கள் ‘ஜாம்பி வைரஸ்’ என்ற வைரஸை கண்டறிந்தனர்.

Zombie-virus

இது குறித்து விஞ்ஞானிகள் கூறியவதாவது: ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த "ஜாம்பி வைரஸ்" பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற வைரஸ்கள் தாக்கினால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் ரொம்வே அதிகம். அதே நேரம் விலங்குகள் அல்லது மனிதர்களைத் தாக்கும் எதாவது வைரஸ் இதேபோல பனிப்பாறை உருகுவதால் மீண்டும் புத்துயிர் பெற்றால் அது பெரியா பாதிப்பைத் தரும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Zombie-virus

உலகெங்கும் பருவநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தொழில் மயமாக்கல், அதிகரிக்கும் வாகனங்கள் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் இதற்கான உச்சி மாநாடுகள் கூட நடத்தப்படுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் புவியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இதைத் தடுக்கவில்லை என்றால் இதுபோல பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web