அதிர்ச்சி! இந்திய பிரதமர் மோடியின் தாயார் காலமானார்!

 
மோடி

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100.  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென், சிகிச்சைப் பலனளிக்காமல் வயோதிகம் காரணமான உடல் உபாதைகளால் அவதிபட்ட நிலையில், இன்று காலமானார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டியில் மோடியின் சகோதர் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார்.  பிரதமர் அவ்வப்போது  தாயாரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வருவதுண்டு.

மோடி ஹீராபென்

இந்நிலையில்,  கடந்த சில நாட்களுக்கு முன்  ஹீரா பென் மோடிக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து  அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று  அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை அறிக்கை  வெளியிட்டிருந்தது.  


இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .தனது தாயார் காலமான செய்தியை ட்விட்டர் பக்கத்தில்  பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web