அதிர்ச்சி.. சென்னையில் நுழைந்த கொரோனா! துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு உறுதி! புதிய வகை கொரோனாவா என கண்டறிய பரிசோதனை!

 
கொரோனா

சீனா, அமெரிக்கா, ஜப்பான், கொரியான்னு பேசிக்கிட்டு இருந்தோம். இப்போது இந்தியாவுக்குள் குஜராத்தில் நுழைந்த புதிய வகை கொரோனா இப்போது தமிழகத்திலும் நுழைய துவங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகள் இருவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, உடன் பயணித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . இந்நிலையில், துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய வகை கொரோனாவினால் தாக்கப்பட்டுள்ளனரா என்று கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் அனைவருக்கும் 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 பயணிகள் சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்துள்ளனர்.

Airport

அவர்களுக்கு நேற்று ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டத்தில், 36 வயது பெண்ணுக்கும், ஒரு குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரையும் வீட்டில் விட்டு சென்றவர், காரில் சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளோம்.

தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் முடிவுகள் 4 அல்லது 5 நாட்களில் கிடைக்கும். அதன் பின்னரே அவர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என கண்டறிய முடியம் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

airport

இந்நிலையில், துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேர் துபாயில் இருந்து சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேருக்கும் புதிய வகை கொரோனாவா அல்லது வேறு வகையா என கண்டறிய மாதிரிகளை அனுப்பி பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web