அதிர்ச்சி.. நேபாளில் பயங்கரம்.. ஓடுபாதையில் மோதி நொறுங்கிய விமானம்! 45 பேர் உயிரிழப்பு!

 
நேபாள் விமான விபத்து

சமீப காலமாக, விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், நேபாளில் 72 பேர் சென்ற விமானம் ஓடுபாதையில் திடீரென மோதி, விழுந்து பெரும் விபத்து நேர்ந்துள்லது. இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேபாளம், பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த பெரும் விபத்து காரணமாக தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் அசுர கதியில் நடைப்பெற்று வருகிறது. விமான நிலையத்தின் ஓடுபாதையில் மலேசியா காத்மாண்டுவில் இருந்து நேபாளம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் செல்லும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் 68 பயணிகள் உட்பட 72 பேர் பயணித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் இருந்து புகை வெளியேறுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், சுமார் 45 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விமானத்தின் மிச்ச பாகங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதனை அணைக்க மீட்பு படை வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் செஸ்னா பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி விமானத்தின் பைலட் உயிரிழந்துள்ளதுடன், பயிற்சி விமானி காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

நேபாள் விமான விபத்து

இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  விபத்துக்குப் பிறகு, விமானம் தீப்பிடித்து எரிந்தது.  உயரமான மலைகளால் சூழப்பட்ட பொக்ராவில், மிகக் குறுகிய காலத்தில் வானிலை மாறுகிறது. அங்கே, உயரமான மலையின் காரணமாக, மேகம் திடீரென்று பார்வையை குறைக்கிறது. விமான விபத்தைத் தொடர்ந்து அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு நேபாள பிரதமர் பிரசாந்த் தஹல் அழைப்பு விடுத்துள்ளார். பொக்காரா தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது.  வீடியோக்கள் மற்றும் காட்சிகளின் படி, விபத்துக்குப் பிறகு விமானம் தீயில் எரிவதை வீடியோவில் காணலாம்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web