அதிர்ச்சி... சென்னையில் 81% பேருக்கு குறைபாடு இருக்கு.. உடனே இதை கவனியுங்க!

 
சூரிய வெளிச்சம் இளம்பெண் உடற்பயிற்சி காலை சூரியன் யோகா மகிழ்ச்சி

கொரோனா பெருந்தொற்றின் காலத்திற்கு பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு மாறியுள்ளது. வொர்க் ஃப்ரம் ஹோம் என்று துவங்கிய வேலை முறை இன்று வரையிலும் பல நிறுவனங்களில், குறிப்பாக ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அங்கே தான் பிரச்சனை துவங்குகிறது. 

ஊரடங்கு உத்தரவு முதல் முறையாக விலக்கிக் கொள்ளப்பட்ட நேரத்தில் நிறைய குழந்தைகள் மருத்துவமனையில் வரிசை கட்டி நின்றன. வாந்தி, செரிமாணமின்மை, காய்ச்சல், அஜீரண கோளாறு என்று அத்தனைப் பேரும் மருத்துவர்களை நாடினார்கள். சொல்லி வைத்தாற்போன்று அத்தனை குழந்தைகளும் விட்டமின் டி குறைபாடுகளால் அவதிப்பட்டன.

பள்ளி நாட்களில் ஓடியாடி விளையாடி சோர்வைப் போக்கிய குழந்தைகளுக்கு இயல்பாகவே வைட்டமின் டி சத்து கிடைத்து வந்த நிலையில், லாக்-டவுன் காலத்தில் செல்போனும், தொலைக்காட்சி பெட்டியும் சூரிய வெளிச்சம் குழந்தைகள் மீது படாதவாறு கவனித்து, கட்டிப் போட்டிருந்தன. இந்நிலையில், தற்போது சென்னையில் 81 சதவீதம் பேர் வைட்டமின்-டி குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் நடத்திய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

வைட்டமின் டி சூரிய வெளிச்சம்

இது குறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத் துறைத் தலைவர் பிரசாந்த் நாக் கூறுகையில், “நாடு முழுவதும் 27 நகரங்களில் ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் சார்பில் 2.2 லட்சம் பேரிடம் வைட்டமின்-டி விகிதத்தை அறியும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 76 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 79 சதவீத ஆண்களுக்கும், 75 சதவீத பெண்களுக்கும் அத்தகைய குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இது சென்னையில் மட்டும் கிடையாது.. மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்த குழந்தைகளும் இப்படி பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இளைஞர்களிடையே, குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட 84 சதவீதம் பேருக்கு போதிய அளவு வைட்டமின்- டி சத்து இல்லை. நகரங்களுக்கு இடையேயான ஒப்பீட்டில் அதிகபட்சமாக குஜராத் மாநிலம் வதோதராவில் 89 சதவீதம் பேருக்கும், சூரத்தில் 88 சதவீதம் பேருக்கும், சென்னையில் 81 சதவீதம் பேருக்கும் வைட்டமின்-டி குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு வளர்ச்சி, வளர்சிதைவு, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு நலம், மனநலம் போன்றவை பாதிக்கப்படும். 

வைட்டமின் டி சூரிய வெளிச்சம் இளம்பெண்

இதன் வாயிலாக, விரைப்பை புற்றுநோய், மன அழுத்தம், சர்க்கரை நோய், முடக்குவாத பாதிப்புகள் ஏற்படும். எனவே, சருமத்தில் சூரியஒளி படுவதை உறுதி செய்வதுடன், வைட்டமின்-டி நிறைந்த உணவுகளையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றார். காலை எழுந்தவுடன் படிப்பு என்பதோடு சூரிய நமஸ்காரத்தையும் அடுத்த தலைமுறைக்கு சொல்லி தாருங்கள். அவர்களை வளர்பது மட்டுமல்ல.. ஆரோக்கியமாக வளர்ப்பதும் நமது கடமை தான்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web