பதை பதைக்கும் சிசிடிவி ஃபுட்டேஜ்!! சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதி பரிதாப பலி!!

 
ரைஃபூதின்

புதிதாக கார் ஓட்ட கற்று கொள்பவர்கள் முறையான  பயிற்சி மையங்களில் கற்றுக் கொள்வதை தவிர்த்து ஏற்கனவே ஓட்ட தெரிந்த அரைகுறை ஆட்களிடம் கற்று கொள்கின்றனர். இதனால் பல சமயங்களில் விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. கோவை  மாவட்டம்  தெற்கு மண்டலத்தில் போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் பாஷீத். இவர் சொந்தமாக இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவரின் மகன்  8 வயது ரைஃபுதீன், 3ம் வகுப்புப் படித்து வந்தான் . ஜனவரி 22-ம் தேதி, சிறுவன் ரைஃபுதீன் அவர்கள் வசிக்கும் தெருவிலேயே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

ரைபூதின்

அதே பகுதியில்  வசித்து வந்த 34 வயது  சையது முகமது ஃபெரோஸ்   சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, சையது தன் காரை பார்க்கிங் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த கார்,  சைக்கிள் ஓட்டிவந்த சிறுவன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.  
இதில் தடுப்பு சுவரின்மீது தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு நெஞ்சு, காது, மூக்குப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது, கார் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாதாரணமாக சைக்கிள் ஓட்டச்சென்ற சிறுவன் கார் மோதி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web