அதிர்ச்சி வீடியோ!! தமிழ் பட நடிகையிடம் சில்மிஷம் செய்த சட்டக்கல்லூரி மாணவர்!!

 
அபர்ணா பாலமுரளி

தமிழ் திரையுலகில் 2017ல்  8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததற்கு  பெரும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன.  சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.  அதன் பிறகு  வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அபர்ணா.


அந்த வகையில் தற்போது தங்கம் என்கிற மலையாள படத்தில் நடித்து ஜனவரி 26ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இப்படத்தின் புரமோஷனுக்காக கேரளா சட்டக்கல்லூரி ஒன்றில் படக்குழு  கலந்துகொண்டது. அந்த விழா மேடையில் நடிகை அபர்ணா பாலமுரளி அமர்ந்திருந்தபோது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மேடையேறி வந்து அபர்ணாவிற்கு பூங்கொத்து கொடுத்து கைகுலுக்கினார்.  

சூரரை போற்று

அபர்ணாவுடன்  போட்டோ எடுப்பதற்காக  அந்த மாணவர் அபர்ணாவின் தோள்மீது கையை போட்டார். இதனை  கொஞ்சமும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அதன்பிறகு அதே மாணவர் மீண்டும் மேடை ஏறி வந்து போட்டோ எடுப்பதற்காகத் தான் கை போட்டேன். தவறான எண்ணம் எதுவும் இல்லை என கூறினார். 2வது முறை கைகொடுக்க மறுத்துவிட்டார் அபர்ணா பாலமுரளி. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web