அதிர்ச்சி வீடியோ!! முதியவரை சாலையில் இழுத்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டி!!

 
சாஹில்

பெங்களூருவில் இரு சக்கர வாகனம் ஒன்று கார் மீது மோதியது. உடனே காரில் இறங்கி கார் ஓட்டுனர் பைக்கில் வந்தவரை பிடிக்க முயன்றார்.  ஆனால் பைக்கை நிறுத்தாமல் கார் ஓட்டுனரையும்  இழுத்துக் கொண்டே தப்பிஓட முயற்சி செய்தான். ஆட்டோவில் வந்தவர் அவரை வழிமறித்து பிடித்து விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூர் மாகடி சாலையில் வயதானவரை பைக்கில் இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இவரை சுற்றி வளைத்த காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் டெல்லியில் இதே போல் ஒரு சம்பவத்தில் இளம்பெண் அஞ்சலி காரில்பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 

போலீஸ்
அதனைத்  தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் நடந்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  தப்பி ஓட முயன்ற இருசக்கர வாகன ஓட்டியை  ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர் விரைந்து சென்று தடுத்து விரட்டி பிடித்துள்ளார். அந்த நேரத்தில் சாலையில் சென்றவர்களும் சேர்ந்து அவனை மடக்கி பிடித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பைக் ஓட்டுனர்  தன் பெயர் சாஹல் என்றும், தான் ஒரு  காரின் மீது மோதி விட்டதாகவும் அந்த காரின் டிரைவரை இழுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.  இதனையடுத்து பைக்கில் இழுத்து செல்லப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web