அதிர்ச்சி வீடியோ!! சிறுத்தைப்புலி தாக்கி 13 பேர் படுகாயம்!!

 
சிறுத்தை புலி

வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி வருகின்றன.இதனால் காட்டில் உள்ள வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. அவைகள் தங்கள் வசிப்பிடங்களை காணவே வருகின்றன. ஆனால் மனிதர்களான நாம் தான் நம்முடைய இடத்திற்கு வருவதாக கூறிக் கொள்கிறோம். ஆனால் இது போன்ற சம்பவங்களில் சில நேரங்களில் பெரும் அசம்பாவிதங்களும் நடந்து விடுகின்றன.

சிறுத்தை புலி

அந்த வகையில் அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள தியோக்  உள்ள செனிஜான் என்ற இடத்தில் அமைந்துள்ள மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அருகில் தான் இந்த  அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.ஜோர்ஹாட் மாவட்டத்தில்  சிறுத்தை ஒன்று வேன் மீது குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுத்தை முள்வேலியை தாண்டி குதித்து பயணிகளை தாக்க முயல்கிறது. இச்சம்பவம் குறித்து  ஜோர்ஹாட் மாவட்ட வன அதிகாரி விடுத்த செய்திக்குறிப்பில்  காலை 10:30 மணியளவில் சிறுத்தை அப்பகுதியில் சிலரைத் தாக்கியதாக தகவல் கிடைத்தது.


 அதைத் தொடர்ந்து எங்கள் குழுவினர் அப்பகுதியை அடைந்தபோது, ​​சிறுத்தை இரு ஊழியர்களைத் தாக்கியது.  அதனை தொடர்ந்து இரண்டாவது குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கண்காணித்து சிறுத்தையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது . மேலும் சிறுத்தை தாக்குதல் ஒன்றும்  முதல் முறையல்ல. முன்னதாக, சத்தீஸ்கரில் டிசம்பர் 12ம் தேதி, சத்தீஸ்கரின் மானேந்திரகர் மாவட்டத்தில் உள்ள குன்வார்பூர் வனப் பகுதியில் உள்ள காந்தாரா கிராமத்தில் மூதாட்டி ஒருவரை தாக்கி உயிரிழக்க செய்தது குறிப்பிடத்தக்கது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web