வீடியோ!! டேங்கர் லாரி வெடித்து சிதறிய கோரக் காட்சி!! 10 பேர் பலி!! பலர் படுகாயம்!!

 
டேங்கர் லாரி

தென் ஆப்பிரிக்காவில் டேங்கர் லாரி ஒன்று வெடித்து சிதறிய கோர வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுதென்னாப்பிரிக்காவின்  தலைநகர் ஜோகன்னஸ்பர்க் கிழக்கே போக்ஸ்பர்க் நகரில்  எரிவாயு டேங்கர் லாரி நேற்று பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லாரியை நகர்த்த முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதத்தில்  அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.



இந்த கோர விபத்தில் சம்பவஇடத்திலேயே  10 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த கோர விபத்தால் அந்த பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. அங்கிருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை உடைந்தது. இரண்டு வீடுகள் மற்றும் பல கார்கள் சேதம் அடைந்தன.


இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அரசு அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தம்போ நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகள் அதன் கூரை சேதமடைந்ததால் தடைபட்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீவிபத்து
மருத்துவமனையின் உள்ளே இருந்து ட்விட்டரில் ஒரு வீடியோ, மக்கள் பதற்றமாக ஓடும் ஒரு குழப்பமான காட்சியை வெளியாகி இருந்தது. மேலும், பாலம் மற்றும் அருகில் பற்றி எரிந்த 2 வீடுகள், மருத்துவமனையின் மேல்கூரையில்  எரிந்த தீயை  தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web