அதிர்ச்சி வீடியோ!! காதலியை கொடூரமாக அடித்து உதைத்த காதலன்!!

 
காதலியை அடித்த காதலன்

பார்க்காமலே காதல், பேசாமலே காதல் என்பதெல்லாம் மலையேறிவிட்டது. தற்போதெல்லாம் காதலி சொல்பேச்சு கேட்கவில்லை எனில் அவளை ரயிலில் தள்ளி கொலை, ஆசிட் வீச்சு, துண்டு, துண்டாக வெட்டி கொலை என கொடூரமாக மாறி வருகிறது. இதே போல் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி காதலன் விட்டுச்சென்றுவிட்டான். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காதலனையும், அவனது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.


மவுகஞ்ச் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் டிசம்பர் 21ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.அந்த பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  அந்த வீடியோவில்  பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி கீழே தள்ளி காலால் உதைக்கும் கொடூர காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பலமாக தாக்கப்பட்ட அந்த பெண் மயக்கமடைந்தார்.இதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை அப்படியே சாலையில் விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். நீண்ட நேரமாக அந்த பெண் அங்கு மயங்கி கிடந்துள்ளார்.

போலீஸ்

இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த கிராம மக்கள் இதுகுறித்து  தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கொடூரமாக தாக்கிய அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 151-ன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு  காதலனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!