ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு நாள் தொடரில் இருந்து விலகல்!! ரசிகர்கள் ஏமாற்றம்!!

 
ஷ்ரேயாஸ் ஐயர்

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய அணி இலங்கையுடன் நடைபெற்ற போட்டிகளில்  இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இதனையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டு  3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளது. இந்த போட்டிகளை பொறுத்தவரை  நியூசிலாந்து அணிக்கு  ஒரு நாள் போட்டியில் கேப்டனாக டாம்லாதமும், டி20 போட்டிகளுக்கு  சான்ட்னரும் கேப்டனாகவும் களம் இறங்க உள்ளனர். 

ஷ்ரேயாஸ் ஐயர்
இந்த போட்டிகள் நாளை ஜனவரி 18ம் தேதி முதல் தொடங்க உள்ளது.  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் ஐதராபாத்தில்  நடைபெற உள்ளது. . இலங்கையுடன் நடைபெற்ற வெற்றியை தொடர்ந்து இந்த தொடரிலும் வெற்றி பெற  வீரர்கள் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக , ஷ்ரேயஸ் ஐயர் விலகுவார் எனவும்,  அவருக்கு பதில் ரஜத் பட்டிதார் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் எனவும்  பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவுதான் என்கின்றனர் ரசிகர்கள். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு  பதிலாக சூர்யகுமார் யாதவ் தான் ஆடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தேச இந்திய  வீரர்கள் பட்டியல் :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், ஸ்ரீகர் பரத், ஷபாஸ் அகமது, ரஜத் பட்டிதார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web