ஓராண்டில் ரூ21 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!!

 
கடத்தல் தங்கம்


தமிழகத்தின் இதயமாக விளங்கும் திருச்சியில் பன்னாட்டு விமான சேவைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சென்னை நீங்கலாக முதல் சர்வதேச விமான நிலையம் என்ற புகழ்பெற்றது திருச்சி பன்னாட்டு முனையம், தென்னகத்தில் வாழும் மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் இந்த விமானநிலையம் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

திருச்சி
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், எலக்ட்ரானிக் பொருட்கள், வெளிநாட்டு கரன்சி என அனுமதியில்லாமல் பொருட்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் சுங்கத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல் தொடர்பாக சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 105 வழக்குகளை பதிவு செய்து ரூபாய் 21 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மீட்டனர். உரிய அனுமதியின்றி தங்கம் எடுத்து வந்த பலரும் அபராதம் செலுத்தி தங்கத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.

திருச்சி விமான நிலையம்

 இந்த வகையில் 1,220 பேரிடம் இருந்து 117 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதற்காக அபராதம் செலுத்திய வகையில் சுங்கத்துறைக்கு ரூபாய் 9 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  மேலும் ரூபாய் 1.29 கோடி மதிப்பிலான எலக்டிரானிக் பொருட்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 3.70 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என விமானத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்

From around the web